மீண்டும் சச்சின் டெண்டுல்கர் செய்த அசத்தலான செயல்! பாராட்டித் தள்ளும் இந்திய மக்கள்!

மீண்டும் சச்சின் டெண்டுல்கர் செய்த அசத்தலான செயல்! பாராட்டித் தள்ளும் இந்திய மக்கள்!


Sachin again help to people

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகமாக பரவியதால் இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலையை இழந்த நிறைய பேர், உணவின்றி தவிக்கின்றனர். பலரது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்கள் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்தியாவிலே மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவ தொடங்கியது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.

sachin

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் நன்கொடையாக வழங்கினார். அறக்கட்டளை மூலம் 5000 ஏழை மக்களுக்கு ஒரு மாதத்துக்கான நிதி செலவை ஏற்றார். 

இந்நிலையில் மீண்டும் மும்பை மாநகரில் கொரோனா வைரஸ் காரணமாகத் தொழிலின்றி வருமானம் இல்லாமல் தவித்த 4000 ஏழைக் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் தன்னார்வ அமைப்பு மூலம்  சச்சின் தெண்டுல்கர் நிதியுதவி வழங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் செய்த இந்த உதவியை இந்திய மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.