இந்தியா

87 லட்சம் குடும்பத்தினருக்கு ரூ.1,500 மற்றும் 12 கிலோ அரிசி..! முழு அடைப்பால் தெலங்கானா முதல்வர் அதிரடி..!

Summary:

Rs. 1500 per ration card and 12kg rice in telengana

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கிவருகிறது. மேலும், 7 பேர் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து நேற்று முழுவதும் ஒருநாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 31 வரை தெலுங்கனாவில் முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மாநிலம் முழுவதும் வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருக்கும் 87 லட்சம் குடும்பத்தினருக்கு 12 கிலோ அரிசி இலவசமாகவும், 1,500 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Advertisement