
Rowdy attacked police officers at pondichery
புதுச்சேரியில் ரவுடியும் அவரது சகோதரரும் சேர்ந்து போலீஸ் அதிகாரிகளை சராமரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அந்த பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை தேக்கி விசாரித்துள்னனர். அதில் ஒருவர் ஏற்கனவே பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் சமமந்தப்பட்ட ஜோசப் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் ஜோசப்பிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது அவர் போலீசாரை தாக்கியுள்ளார். போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோது ஜோசப் உடன் வந்திருந்த அவரது சகோதரரும் ஜோசப்புடன் சேர்ந்து காவல் துறை அதிகாரிகளை சராமாரியாக தாக்கியுள்ளார்.
பதிலுக்கு போலீசாரும் அவர்களை தாக்க, இறுதியில் அடிதடி சண்டையாக மாற்றியுள்ளது. இந்த சண்டையை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ.
Cops brutally attacked by gangster and his brother at Puducherry. pic.twitter.com/muxvIjLQrC
— Pramod Madhav (@madhavpramod1) October 1, 2019
Advertisement
Advertisement