அண்ணன், அண்ணிக்கு மனப்பூர்வமான நன்றி- அனில் அம்பானி. ஏன் தெரியுமா?

relince communication - ariction - ambani brothers


relince-communication---ariction---ambani-brothers

நாளை உச்ச நீதிமன்றத்தில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் கடன் பிரச்சனை தொடர்பான விசாரணை நடைபெற உள்ள நிலையில் அவரது கடன்களை முகேஷ் அம்பானி பைசல் செய்து தம்பி ஜெயிலுக்குப் போவதை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திடமிருந்து 550 கோடி கடனாக பெற்றிருந்தது. இந்நிலையில் 118 கோடி திரும்பி செலுத்திய நிலையில் மீதித் தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதனால் எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணை நாளை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அனில் அம்பானியின் சிறை வாழ்க்கை உறுதியானது.

mugesh ambani

இந்நிலையில் மீதமுள்ள ரூ.458.77 கோடியை வட்டியுடன் சேர்த்து முகேஷ் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இதனால் தம்பி அனில் அம்பானி சிறை செல்வதைத் தடுத்து நிறுத்தி அண்ணன் முகேஷ் அம்பானி உதவியுள்ளார்.

இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனில் அம்பானி அண்ணனுக்கும் அண்ணிக்கு நன்றி சொல்லியிருக்கிறார். “கடினமான சூழலில் என்னுடன் இருப்பதற்காக மரியாதைக்குரிய அண்ணன் முகேஷ் மற்றும் நீடா ஆகியருக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.