கேரளாவிற்கு நிவாரண நிதியாக RELIANCE அம்பானி கொடுத்தது எவ்வளவு தெரியுமா?Reliance company donated 71 crore to kerala flood relief fund

கேரளாவில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு இரண்டு மாதங்களாக தொடர்ந்து மலை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் தங்களது உடைமைகளை இழந்து, உன்ன உணவு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் தவித்து வர்கின்றனர். கேரளா மக்களுக்கு உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து நிவாரண பொருட்களும், உதவிகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

kerala flood

இந்நிலையில் கேரளாவிற்கு  ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக மொத்தம் 71 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.  முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு   ரூ.21 கோடியும்  ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீத்தா முகேஷ் அம்பானி 
இதுபற்றி  கூறுகையில், “கேரளாவில் நமது சகோதர சகோதரிகள் மிகப் பெரிய துன்பத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உதவுவது நம் கடமை. அதுமட்டுமல்லாமல் ஒரு கார்ப்பரேட் அறக்கட்டளைக்கு இதில் கூடுதல் பங்கு இருக்கிறது. அதனால் இந்த உதவியை செய்து இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.