அதிர்ச்சி..! பாடம் சொல்லிக்கொடுத்த குரு குடும்பத்திற்கு இப்படியொரு சோகமா?.. குடும்பத்தோடு எடுத்த விபரீத முடிவு.!

அதிர்ச்சி..! பாடம் சொல்லிக்கொடுத்த குரு குடும்பத்திற்கு இப்படியொரு சோகமா?.. குடும்பத்தோடு எடுத்த விபரீத முடிவு.!


Ranipet Kaveripakkam College Professor Ramalingam Wife Anu Radha Son Bharat Suicide Loan Dept Issue

கடன் தொல்லையின் காரணமாக கல்லூரி பேராசிரியர் தனது மனைவி மற்றும் மகனுடன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம், சுன்னப்பமுதலி தெருவை சார்ந்தவர் இராமலிங்கம் (வயது 66). இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி அனுராதா (வயது 57). இவர்கள் இருவருக்கும் விஷ்ணு என்ற 29 வயது மகனும், பரத் என்ற 28 வயது மகனும் உள்ளனர். 

மூத்த மகன் விஷ்ணு பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இளையமகன் பரத் கோயம்புத்தூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது, வீட்டில் இருந்தவாறு பரத் பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், இராமலிங்கத்தின் தம்பி சிவகுமார் அண்ணனை பார்க்க, நேற்று மாலை நேரத்தில் இராமலிங்கத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

Ranipet

இதன்போது, படுக்கையறையில் இராமலிங்கம், அவரது மனைவி அனுராதா தனித்தனியே தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். மற்றொரு அறையில் பரத் தூக்கிட்டு பிணமாக இருந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிவகுமார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரின் உடலையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், கடன் தொல்லையால் குடும்பத்தோடு இராமலிங்கம் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.