இந்தியா

மருத்துவனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அதிசயம்..! பிரசவம் பார்த்து சோர்வடைந்த மருத்துவர்..! ஆச்சரியத்தில் குடும்பத்தார்கள்..!

Summary:

Rajasthan women deliver 4 babies

ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான ஆயிஷா என்ற பெண் ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷபீரில் வசிக்கும் பட்கோரி என்ற நபரை திருமணம் செய்துகொண்ட ஆயிஷா தனது முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அடுத்தடுத்து ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. நான்கு குழந்தைகளுமே சுக பிரசவமாக பிறந்தநிலையில் நான்கு குழந்தைகளும் மிகவும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் இந்த சம்பவம் மிகவும் அரிதானது என கூறியுள்ளனர்.

காரணம், நான்கு குழந்தைகளும் சுக பிரசவத்தில் பிறந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியமாக  உள்ளது. இதுபோன்ற பிரசவத்தில் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் பிறக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், கிராமத்தின் உறவினர்கள் மட்டுமல்ல, தொலைதூர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் விருந்து வழங்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறியுள்ளனர்.


Advertisement