ராஜஸ்தான்... ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக்க தீர்மானம்..!!

ராஜஸ்தான்... ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக்க தீர்மானம்..!!


Rajasthan... Resolution to make Rahul Gandhi the Congress Party leader again..!!

காங்கிரஸ் கட்சிதலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஜெய்ப்பூர், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முதலமைச்சர் அசோக் கெலாட் முன்மொழிந்த இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மாநில உணவுத்துறை அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியா கூறினார். இதைப்போல மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்குவதாகவும் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கச்சாரியா தெரிவித்தார்.