இந்தியா

இளம் பெண்ணை கடத்தி 1 மாதம் மாறி மாறி ஆறு பேர் செய்த காரியம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Summary:

Rajashthan Yong girl kidnapped

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு இளம் பெண்ணை ஆறுபேர் கொண்ட கும்பல் ஓன்று கடத்தியதோடு தொடர்ச்சியாக ஒரு மாதம் வரை அந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டுள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆன நிலையில் அந்த பெண் என்னவானார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்துவந்த இளம் பெண் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஒரு மாதத்துக்கு முன் கடத்தப்பட்ட தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

பெண்னின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மூவரும் போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement