தொடங்கியது தென்மேற்கு பருவமழை! கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!

தொடங்கியது தென்மேற்கு பருவமழை! கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!


rain in kerala


தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கயிருக்கும் நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு, மத்திய மேற்கு, மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு சூறாவளி காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த தென்மேற்கு பருவமழை அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் தொடங்கும் என்பதால் மீனவர்கள் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலுக்கு ஜூன் நான்காம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டத்திற்கு மஞ்சள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.