இந்தியா முழுவதும் சுற்றிய ராகுலுக்கு சொந்த தொகுதியில் நேர்ந்த சோகம்!

இந்தியா முழுவதும் சுற்றிய ராகுலுக்கு சொந்த தொகுதியில் நேர்ந்த சோகம்!


rahul-pushed-back-at-amethi-by-smrithi-irani

இன்று நாடு முழுவதும் பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ள சம்பவம் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட பின்னடைவு தான். 

உத்திரப் பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தார். 2014ல் ஸ்மிருதி தோற்ற பிறகும் அவர் தொடர்ந்து தொகுதிக்கு சென்று, மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தினார்.

rahul gandhi

இந்தியா முழுவதும் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வந்தார். ஆனால், அவர் தொகுதியில் பிரசாரம் சரியாக செய்யவில்லை என பாஜகவால் குற்றம்சட்டப்பட்டார். அதற்கேற்றார் போல் ராகுல் காந்திக்கு அமேதி தொகுதி மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். 

இந்த தொகுதியில் ராகுல் காந்தி 3,18,253 வாக்குகள் பெற்று பாஜகவின் ஸ்மிருதி இரானியை விட சுமார் 45000 வாக்குகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். கிட்டத்தட்ட ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். 

rahul gandhi

இவ்வாறு நடக்கும் என முன்கூட்டியே உணர்ந்ததால் என்னவோ, உஷாராக ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அந்த தொகுதியில் ராகுல் காந்தி 7 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளார்.