அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி மரணம்.! உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி.!

Summary:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி , அவரது உடலை தோளில் சுமந்து சென்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி , அவரது உடலை தோளில் சுமந்து சென்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் கேப்டன் சதீஸ் சர்மா (73). இவர் 1993 – 1996 ஆம் ஆண்டு வரை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விமானியாக இருந்தபோது அவரோடு நட்பு ரீதியாக நெருக்கமாக இருந்தவர் சதீஸ் சர்மா.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பின், ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தபோது, சதீஸ் சர்மாவும் அரசியலில் இறங்கினார். ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த இவர், ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகும் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

சதீஷ் ஷர்மா, நேற்று முன்தினம் கோவாவில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், மறைந்த கேப்டன் சதீஷ் சர்மா உடலை, ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சதீஷ் சர்மா மறைவுக்கு ராகுல்காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், “கேப்டன் சதீஷ் சர்மா மறைந்ததைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்". எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement