பிரதமரை வரவேற்க பஞ்சாப் முதல்வர் விமான நிலையம் செல்லாதது ஏன்.? அவரே கொடுத்த விளக்கம்.!

பிரதமரை வரவேற்க பஞ்சாப் முதல்வர் விமான நிலையம் செல்லாதது ஏன்.? அவரே கொடுத்த விளக்கம்.!



punjab-cm-talk-about-pm-arrival

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த ரூ.1000 கோடி முதலீடு திட்டங்களுக்கான வளர்ச்சிப்பணிகள் தொடர்பான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள அங்கு நேற்று பயணம் மேற்கொண்டு இருந்தார். பிரதமர் மோடியின் வாகனம் அங்குள்ள பாலத்தில் செல்கையில், போராட்டக்குழுவால் முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் இடைமறிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. 

இந்தநிலையில் இதுகுறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, மோசமான வானிலை மற்றும் எதிர்ப்புகள் காரணமாக பயணத்தை நிறுத்துமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால் ,அவரது திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை.

பிரதமர் மோடி இன்று பெரோஸ்பூர் மாவட்டத்திற்கு செல்லமுடியாமல் திரும்பியதற்கு நான் வருந்துகிறேன். நாங்கள் எங்கள் பிரதமரை மதிக்கிறோம், எனது செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பிரதமரை வரவேற்க அமைச்சர் அனுப்பப்பட்டார் என்று தெரிவித்தார்.