இந்தியா

சீனா-இந்தியா இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் யாருடன் கூட்டு சேரும்.? பஞ்சாப் முதல்வர் அதிரடி!

Summary:

punjab cm talk about china and pakistan

மத்திய அரசு  இராணுவத்தை இன்னும்  பலப்படுத்த வேண்டும் என்று பஞ்சாப்  முதல்வர்  கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். மேலும், சீனாவுடன் ஏதேனும் போர் ஏற்பட்டால் நிச்சயமாக அதில் பாகிஸ்தானும் பங்கேற்கும் என்று கூறியுள்ளார்.

சீனா தன்னுடைய இருப்பை, திபெத் பீடபூமியில் இருந்து இந்திய பெருங்கடல் வரைக்கும் அதிகரித்து வருகிறது. அங்கு தான் நாம் இந்திய ராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க வேண்டும். நாம் பலமாக இருந்தால் மற்றவர்கள் ஒருமுறைக்கு மூன்று முறை யோசிப்பார்கள் என்று கூறினார்.

சீனர்களின்  ஊடுருவல் ஒன்றும் புதிதல்ல. 1962ம் ஆண்டும் அவர்கள் கால்வானிற்கு வந்தார்கள். ஆனால் இப்போது நாம் 10 படைப்பிரிவுகளுடன் தயார் நிலையில் இருக்கின்றோம். அதையும் தாண்டி சீனர்கள் உள்ளே வந்தால் ஏமாற்றம் அடைவார்கள் என சீன ஊடுருவல்களைப் பற்றி விவாதித்த அவர், நாம் மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறோம், சீனர்கள் நம்மை வெல்லலாம் என்று நினைத்தால்  அது அவர்களின்  முட்டாள்தனமான யோசனையாக  இருக்கும் என கூறினார்.


Advertisement