தனியார் பள்ளி தாளாளர் மற்றும் அவரது மனைவி தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!

தனியார் பள்ளி தாளாளர் மற்றும் அவரது மனைவி தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!


Private school owner and his wife commit suicide


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர்கள் கர்நிதி சுப்ரமணியம் - ரோஷ்னி. இந்த இளம் தம்பதியர் கோல்யகுந்தலா நகரில் ஒரு தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். கர்நிதி சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், ரோஷ்னி அதேபள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் நடத்தும் தனியார் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரமணியம் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து 2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

ஆனால், கொரோனா காரணமாக பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் மற்றும் மாணவர் சேர்க்கை தடைபட்டது. மேலும், கொரோனா காலம் என்பதால் பள்ளியில் கட்டணம் வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில், கர்நிதி சுப்ரமணியம் வாங்கிய கடனை திரும்பி செலுத்துவதிலும், கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் கடந்த சில மாதங்களாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

School teacherஇதனால், சுப்ரமணியம் – ரோஷ்னி தம்பதி மிகுந்த நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கடுமையான கடன் சுமையால் வேதனையில் இருந்த சுப்ரமணியம் – ரோஷ்னி தம்பதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தற்கொலை செய்துகொண்ட தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.