ஆரம்பமே அமர்க்களம்! விவசாயிகளின் துயர் துடைத்த பிரதமர் மோடி; என்ன விஷயம் தெரியுமா?



prime minister - modi vs farmer - monthly 2000 a/c

2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நாடு முழுவதும் 2 ஹெக்டேருக்கும்(5 ஏக்கர்) குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 சிறப்பு உதவி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுபர் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிதியானது தகுதியான விவசாயிகளுக்கு ரூ.2000 வீதம் ஆண்டிற்கு 3 முறை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான ரூ.75000 கோடியை மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் பெயரில் ஒதுக்கியது. 

modi

இந்நிலையில் மீண்டும் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து விவசாயிகள் பயனடைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.