இந்தியா

3 வதும் பெண் குழந்தை.. வீட்டில் யாரும் இல்லாதபோது கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. துடி துடித்து பலியான சோகம்

Summary:

கருவை கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருவை கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா பூலவர்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்யா(வயது 27). இவருக்கு திருமணம் முடிந்து ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளநிலையில் ஸ்ரீகண்யா மூன்றாவது முறையாக கற்பமாகியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீகண்யா குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்துகொள்ள வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது ஸ்ரீகண்யாவை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பெண்குழந்தைகள் உள்ளநிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஸ்ரீகண்யா இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை இதனை அடுத்து தனது வயிற்றில் உள்ள கருவை கலைக்க ஸ்ரீகண்யா முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் கருத்தடை மாத்திரைகளை வாங்கி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். கருத்தடை மாத்திரை சாப்பிட சிறிது நேரத்தில் அவருக்கு கடுமையான இரத்த போக்கு ஏற்பட்டு வீட்டிலையே மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார்.

ஸ்ரீகண்யா மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே, சட்டத்தை மீறி வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என ஸ்ரீகண்யாவிடம் கூறிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீகண்யாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement