இந்தியா

விமான விபத்தில் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்! கதறியவாறு வெளிநாட்டிலிருந்து விரைந்த கணவன்! துயர சம்பவம்!

Summary:

Pregnant women dead in kerala flight crash

 துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில்  நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு 191 பேருடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகி ஏற்பட்ட விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் கோழிக்கோட்டை சேர்ந்த மனல் அகமது என்ற 25 வயது கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். இவர் இன்னும் 10 நாட்களில் தங்களது முதலாமாண்டு திருமண விழாவை கொண்டாடவிருந்தார். சுற்றுலா விசா மூலம் துபாயில் பணிபுரியும் தனது கணவரை  பார்க்க சென்ற அவர், விசா காலாவதியான நிலையில் கேரளா திரும்பியுள்ளார். அப்பொழுதே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்நிலையில் அவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக அவரது  கணவர் அதிஃப் முஹம்மது இந்தியா திரும்புகிறார். இந்த துயர சம்பவம் குறித்து அதிஃப் முஹம்மதுவின் தந்தை கூறுகையில், இது எங்களது குடும்பத்திற்கு கடினமான நேரம். அவரது மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம். 

ஆனாலும் எந்த ஒரு நம்பகமான தகவலும் வராததால் கடவுளிடம் அவர் உயிருடன் இருக்கவேண்டுமென  பிரார்த்தனை செய்தோம். அவர் நன்கு படித்த, லட்சியம் கொண்ட பெண் என கதறி அழுதுள்ளனர்.


Advertisement