இந்தியா

கொளுந்து விட்டு எரிந்த தீ; 4 குழந்தைகளை வீசிவிட்டு உயிரை மாய்த்த தாய்! உருக்கமான சம்பவம்

Summary:

pregnant girl saved 4 children and dead in fire accident

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாடியில் குடியிருந்த 27 வயது கர்ப்பிணி பெண் தனது நான்கு குழந்தைகளை தூக்கி வீசிவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

காசியாபாத்தில் பாத்திமா என்ற பெண் தனது 4 குழந்தைகள் மற்றும் கணவருடன் முதல் மாடியில் வசித்து வந்தார். பாத்திமாவின் கணவர் அதே கட்டிடத்தில் தரைப்பகுதியில் சொந்தமாக பேக்கரி ஒன்றை நடத்தி வந்தார். மேலும் பாத்திமா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12:30 மணி அளவில் தரை தளத்தில் இருந்த பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வீட்டின் முதல் தளத்திற்கும் பரவியது. அந்த சமயத்தில் பாத்திமா தனது குழந்தைகளுடன் முதல் மாடியில் இருந்துள்ளார். பாத்திமாவின் கணவர் மற்றும் சகோதரர்கள் பேக்கரியில் ஏற்பட்ட தீயை அணைக்க கடுமையாக போராடி உள்ளனர். ஆனால் தீ வேகமாக மேல்நோக்கி பரவிவிட்டது.

முதல் மாடியில் இருந்த அவர்களால் கீழே இறங்கி வர முடியவில்லை. இந்நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களின் அலறல்  சத்தத்தை கேட்டு ஓடி வந்தனர். அப்போது மேலே தீயின் நடுவே பாத்திமா மற்றும் குழந்தைகள் சிக்கிக்கொண்டதை பார்த்துள்ளனர். கீழே இருந்தவர்கள் குழந்தையை தூக்கி வீசுமாறு பாத்திமாவிடம் கூறியுள்ளனர்.

Ghaziabad fire,Ghaziabad

அதனை தொடர்ந்து பாத்திமாவும் தனது குழந்தைகள் 4 பேரையும் ஒவ்வொருவராக மாடியிலிருந்து கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசியுள்ளார். அவர்களும் குழந்தைகளை பத்திரமாக பிடித்துள்ளனர். ஆனால் கடைசியில் பாத்திமாவால் தீயில் இருந்து வெளியே வர முடியவில்லை. கர்ப்பிணியாக இருந்த அவர் மட்டும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பேக்கரியில் இருந்த கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட மின் கசிவால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறிந்தனர்.


Advertisement