பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து சற்றுமுன் வெளியான தகவல்..! சிகிச்சை வழங்கும் ராணுவ மருத்துவனை தகவல்.!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து சற்றுமுன் வெளியான தகவல்..! சிகிச்சை வழங்கும் ராணுவ மருத்துவனை தகவல்.!


Pranab Mukherjees health condition remains critical says Army hospital

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது 84 வயதாகவும் பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல்நிலை மோசமானநிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு மூளையில் உள்ள இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கதறியப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Pranap Mukarji

அதேநேரம் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இருப்பினும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நிலை மோசமாக இருந்தாலும் அவரது உடல் உறுப்புகள் சீராக இருப்பதாகவும், அவரது உடல் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மருத்துவர்கள் கூறிவரும்நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்துவருகின்றனர்.