இந்தியா

நடுவானில் பறந்த விமானம்.! திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.! அடுத்து நடந்த ஆச்சர்யம்.!

Summary:

விமான பயணத்தின் போது பெண்ணிற்க்கு நடந்த சம்பவம்! திடீரென தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!!

விமான பயணத்தின் போது, மருத்துவர்கள் உதிவியுடன்  ஆண் குழந்தையை பெற்றெடுத்த கர்பிணி பெண்.

லண்டனில் இருந்து சுமார் 203 பயணிகளுடன் ஏா் இந்தியா விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது, அந்த விமானத்தில் வந்த ஒரு கற்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக விமானத்தில் உள்ள பயணிகளின் அவசர சிகிச்சைக்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த மருத்துவ குழுவினா் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனா்.

இதனையடுத்து, அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் பிராங்க்பா்ட் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் தாயும்,குழந்தையும் நலமாக இருக்கிறாா்கள். அந்தப் பெண்ணுடன் பயணித்து வந்தவா் அவருக்கு உதவியாக இருக்கிறாா். அந்தப் பெண்ணிற்க்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.


Advertisement