தாயுடன் உறங்கிய மூன்று வயது குழந்தை பலி! நெஞ்சை உருக்கும் சம்பவம்!popal-three-years-old-baby-slept-into-bathtub

போபாலில் வசித்துவருபவர் சுரேசந்திர ரகுவன்ஷி. இவருக்கு மூன்று வயதில் குழந்தை ஓன்று இருந்துள்ளது. சம்பவத்தன்று குழந்தை தாயுடன் படுத்து உறங்கியுள்ளது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த குழந்தையை காணவில்லை என சுரேந்தரின் மனைவி வீடு முழுவதும் தேடியுள்ளார்.

அப்போது பாத்ரூமில் இருந்த தண்ணீர் வாளியில் குழந்தை விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார் சுரேந்தர் மனைவி. உடனே குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Crime

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். சுரேந்தரின் மனைவிக்கு உடல்நிலை சரி இல்லாததால் தூக்க மாத்திரை போட்டுவிட்டு உறங்கியதாலும், குழந்தை தானாகவே எழுந்து சென்று தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.