10 வருடங்களாக ஏழ்மையாக வசித்துவந்த கட்டிடத்தொழிலாளி! அவர் வாங்கிய லாட்டரியால் தலைகீழாக மாறிய வாழ்க்கை!

10 வருடங்களாக ஏழ்மையாக வசித்துவந்த கட்டிடத்தொழிலாளி! அவர் வாங்கிய லாட்டரியால் தலைகீழாக மாறிய வாழ்க்கை!


poor man got price in lottery


மேற்கு வங்கத்தை சேர்ந்த முல்ஹக் என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்து கட்டிடத்தொழிலில் பணிபுரிந்து வந்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில்  சில நாட்களுக்கு முன்பு முல்ஹக் கேரள அரசின் அனுமதியுடன் விரிக்கப்பட்ட ரூ.1 கோடி லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்தநிலையில் அவர் வாங்கிய அந்த லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்துள்ளது.

money

பரிசு கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சியில் இருந்த முல்ஹக், தனது லாட்டரிச்சீட்டை யாரும் பறித்து விடக்கூடாது என்பதற்கக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு போலீசாரிடம் சென்று உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து காவல்நிலையத்தில் இருந்த போலீசார் லாட்டரிச்சீட்டை வாங்கி பார்த்து அந்த சீட்டுக்கு ரூ.1 கோடிகிடைத்திருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பொலிசார் அவரை உரிய வங்கிக்கு அழைத்துச் சென்று லாட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, லாட்டரியில் ஒருகோடி பரிசு பெற்ற முல்ஹக் கூறுகையில், தான் பிழைப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை ஓட்டிவந்தேன். இந்தநிலையில் தற்போது லாட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு குழந்தைகளின் வாழ்கை முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவோம் என கூறினார்.