காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த மதுவை கொண்டு மதுவிருந்து நடத்திய காவலர்களால் ஏற்ப்பட்ட பரபரப்பு..!

காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த மதுவை கொண்டு மதுவிருந்து நடத்திய காவலர்களால் ஏற்ப்பட்ட பரபரப்பு..!


police station inside two police drink alcohol

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூர் இரண்டாவது நகர காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் இரவு நேர பணியில் இருந்து வந்துள்ளனர். அந்த காவல் நிலையத்தில் கர்நாடகவிருந்து கடத்தி வரப்பட்ட மதுவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். 

அந்த மதுவை எடுத்து இரவு பணியில் இருந்த காவலர்கள் இருவரும் சேர்ந்து குடித்துள்ளனர். தற்போது அந்த இரண்டு காவலர்களும் மதுவிருந்து நடத்திய வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அந்த வீடியோ பதிவை பார்த்த நெட்டிசன்கள், மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய காவலர்களே இப்படி செய்யலாமா என கேள்வி எழுப்புவதுடன், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.