
கணவனின் தொல்லையால் புகார் கொடுக்க சென்ற மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற இன்ஸ்பெக்டர்!.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தை சேர்ந்த சம்யுக்தா என்பவருக்கும் அவரின் கணவருக்கும் இடையே வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சம்யுக்தா காவல்நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் காவல்நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளராக பணி புரிந்த தேஜா மூர்த்தி சம்யுக்தாவிடம் செல்போன் நம்பரைப் வாங்கி கொண்டு, உயர் அதிகாரியிடம் பிரச்சினையைப் பேசி முடிக்கிறேன் என கூறி அடிக்கடி, அந்தப் பெண்ணிற்கு போன் பண்ணிப் பேசி இருக்கிறார்.
ஒரு நாள் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் வீட்டிற்கு வந்த தேஜா மூர்த்தி, அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த சம்பவம் பற்றி மகளிர் அமைப்பிடம் கூறி தேஜா மூர்த்தி மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தேஜா மூர்த்தியை தேடிவந்தனர். இதனை அறிந்த தேஜா மூர்த்தி தலைமறைவானார். அந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement