இந்தியா

காரை தடுத்து நிறுத்திய காவலரின் சட்டையில் நாக்கால் நக்கிய இளம் பெண்..! இளம் பெண்ணின் செயலால் அதிர்ச்சியான காவலர்..!

Summary:

Police in Salt Lake town saw a person lick an officer.

கொரோனா ஊரடங்கு உத்தரவின் போது சாலையில் வந்த காரை வழிமறித்த காவலர் ஒருவரின் சட்டையை இளம் பெண் ஒருவர் நக்குவதுபோல் எச்சில் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அணைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சில பகுதிகளில் மக்கள் வெளியே நடமாடிக்கொண்டும், வாகனங்களில் சுற்றித்திரிந்துகொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி கார் ஓட்டுநரிடம் வெளியில் வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்துள்ளனர்.

இதனிடையே காரின் பின்இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர், திடீரென காரில் இருந்து இறங்கி வந்து விசாரணை செய்த காவலர் மீது நக்குவது போல் செய்து காவலரின் சட்டையில் எச்சில் செய்து காவலரை அச்சப்படுத்தியுள்ளார். பின்னர் போலீசாருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், தான் தனிமையில் இருந்து வருவதாகவும், உடனே மருத்துவரை சந்திக்கவேண்டும் எனவும் அந்த பெண் வாதிடுகிறார். என்னதான் இருந்தாலும், பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரிடம் அந்த பெண் இப்படி நடந்துகொண்டதை பலரும் கடுமையாக கண்டித்துவருகின்றனர்.


Advertisement