இந்தியா

ஊரடங்கில் வெளியே சுற்றிய வாகனம்! தட்டி கேட்ட போலீசாரின் கையை துண்டாக்கி கொடூரம்!

Summary:

Police hand cut off in punjab

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது.மேலும் அந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரை 8356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வைரஸ் கட்டுக்குள் வராத நிலையில் பல பகுதிகளிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 இந்நிலையில் இன்று காலை பஞ்சாப் பாட்டியலா பகுதியில் மர்மநபர்கள் சிலர் வாகனம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்பொழுது காய்கறி சந்தையில் தடுப்பு வைத்திருந்த போலீசார் வாகனத்தை நிறுத்த கூறி அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். 

அப்பொழுது அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கையை வாளால் வெட்டி துண்டாக்கியுள்ளனர். மேலும் இரு போலீஸ் அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைகள் துண்டாக்கப்பட்டவருக்கு கைகளை ஒட்ட  பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்படுவதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார். 


Advertisement