இந்தியா

20 வயது பெண்ணை 4 கிமீ தனது தோள்மீதே சுமந்து சென்ற காவலர்! நடுக்காட்டில் நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Summary:

police carry unhealthy girl in andrea

ராஜம்பேட்டைக்கு அருகில் உள்ள உட்குரு என்ற கிராமத்தை சேர்ந்தவர் புஜ்ஜி.  20 வயது நிறைந்த இவர் ராஜம்பேட்டை முன்னாள் எம்எல்ஏ அகேபதி  அமர்நாத் ரெட்டி தலைமையில்,  அண்ணாமையா நடைபாதை வழியாக திருமலாவிற்கு சென்ற ஏராளமான பக்தர்களுடன்  தரிசனத்திற்கு சென்றுள்ளார். 

அப்பொழுது பக்தர்கள் அனைவரும் காட்டு வழியாக சென்றபோது, புஜ்ஜிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனம் எதுவும் அங்கு கிடைக்காத நிலையில் என்ன செய்வது என தெரியாமல் மற்ற பக்தர்கள் விழித்து நின்றுள்ளனர். அப்பொழுது சிறப்பு படை காவலராக வந்திருந்த  குள்ளையப்பா என்பவர் அப்பெண்ணை தான் தூக்கி செல்வதாக கூறியுள்ளார். மேலும் தனது தோள்களில் புஜ்ஜியை தூக்கிக்கொண்டு 4 கிலோ மீட்டர் சென்று திருப்பதி வெங்கடாசலபதியை  தரிசனம் செய்ய வைத்துள்ளார். 

          

இந்நிலையில் கான்ஸ்டபிள் குள்ளையப்பாவிற்கு பக்தர்கள் பலரும் நன்றி கூறியுள்ளனர்.   மேலும் புஜ்ஜி அருகிலுள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவல் உயரதிகாரி தக்க சமயத்தில் உதவிய குள்ளையப்பாவிற்கு வெகுமதிகள் வழங்கி பாராட்டியுள்ளார்


Advertisement