இந்தியா

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ: முக கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுனரை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய போலீசார்.!

Summary:

மத்திய பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முகக் கவசத்தை சரியாக அணியாமல், அதாவது அவர் அணிந்திருந்த முக கவசம் அவரது மூக்கிற்கு கீழ் இருந்துள்ளது. இதனை பார்த்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தடுத்து நிறுத்தி, அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் காவல் நிலையத்திற்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தநிலையில் போலீசாருக்கும் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த இரண்டு போலீசாரும் ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீசார் அழைத்தும் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணாவை போலீசார் நடுரோட்டில் வைத்து தாக்கியுள்ளனர். அங்கு நடந்த சம்பவத்தை சிலர் செல்போன் மூலமாக படம் எடுத்து அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இரண்டு போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்


Advertisement