தோழியை விபச்சாரத்தில் தள்ளிய 5 பெண்களை கண்டந்துண்டமாக வெட்டிய தோழன்.. உல்லாசத்திலேயே கைலாசம்.. சீரியல் கில்லரின் திகீர் செயல்.!

தோழியை விபச்சாரத்தில் தள்ளிய 5 பெண்களை கண்டந்துண்டமாக வெட்டிய தோழன்.. உல்லாசத்திலேயே கைலாசம்.. சீரியல் கில்லரின் திகீர் செயல்.!


police-arrested-man-for-killed-5-girls

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாண்டியா கால்வாயில் ஜூன் மாதம் 8-ஆம் தேதி உடல் துண்டிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும், அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரக்கேரே கிராமத்திலும் கால்வாயில் பெண்ணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. 

இந்த இரண்டு விஷயங்களை இணைத்து பார்த்த காவல்துறையினர் இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டனர் என்பதை கண்டறிய, 45 காவல்துறையினர் உள்ளடக்கிய 9 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறாக கர்நாடக மாநிலம் மற்றும் அண்டை மாநிலத்தில் மாயமாகியிருந்த 1,116 பெண்களில் 2 பேர் உடல்துண்டாக்கி கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கண்காணிக்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் இதே பாணியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

இதனால் இந்த கொலை எண்ணிக்கை 3-ஆக உயர்ந்த நிலையில், அடுத்த கொலை செய்யப்படுவதற்கு முன் கொலையாளிகளை கைது செய்யவேண்டும் என்று காவல்துறையினர் முனைப்பு காட்டியுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் சிக்னல் தொழில்நுட்பரீதியாக ஆய்வு செய்த சமயத்தில், சம்பவநாளில் மைசூரிலிருந்து மாண்டியாவிற்கு குறிப்பிட்ட செல்போன் நகர்ந்து, பின்னர் மைசூர் நோக்கி மீண்டும் சென்றது. 

karnataka

இந்த செல்போனுக்கு சொந்தக்காரர் குறித்து விசாரணை செய்ததில், பெங்களூரில் உள்ள ஆயத்த ஆடையகம்  நிறுவனத்தில் பணியாற்றி வரும் சித்தலிங்கப்பா என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் பெண்களிடம் நெருங்கிப்பழகும் குணம் கொண்ட நிலையில், அவர்களுடன் உல்லாசமாக சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது சாம்ராஜ்நகர் சார்ந்த பாலியல் தொழிலாளி சந்திரகலா என்ற பெண்மணியுடன் இவருக்கு நெருக்கம் ஏற்படவே, அவர் தான் ஏன் பாலியல் தொழிலுக்கு வந்தேன்? என்று தனது வாழ்நாள் கதையை கூறுகிறார்.

இதனையடுத்து மேலும் தன்னை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்கள் குறித்து தெரிவித்த சந்திரகலா, அவர்களை கொலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சித்தலிங்கப்பா மைசூரில் வீடு எடுத்து வாடகைக்கு இருந்து சம்பந்தப்பட்ட பெண்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர்களுடன் பலமுறை அந்த வீட்டில் தனிமையில் சித்தலிங்கப்பா இருந்த நிலையில், கடந்த மே மாதம் பெங்களூரை சேர்ந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். 

அதனை தொடர்ந்து சந்திரகலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது பெண்ணையும் கொலை செய்து மாண்டியாவில் வீசி இருக்கிறார். கொலை செய்யப்பட்டவர்களின் உடலை துண்டு துண்டாக்கி, மூட்டை கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துவந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வீசியுள்ளார். இதனால் சித்தலிங்கப்பாவும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சந்திரகலாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் சித்தலிங்கப்பா 5 பெண்களை கொலைசெய்திருப்பதாக தெரியவந்துள்ளது.