13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
அழகு நிலையத்தில் ஆ., தொழில்.. தடாலடியாக திறந்தவர்களுக்கு ஷாக்.. 3 அழகிகளுடன்., 2 பேர்.. பகீர் சம்பவம்.!
அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய உரிமையாளர் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உருளையன்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகாமையில் ராஜாநகர் அய்யனார் கோவில் தெருவில் அழகு நிலையம் ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு விபசாரம் நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான காவல்துறையினர் அழகு நிலையத்தில் தடாலடியாக புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக அழகு நிலைய உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, அவர் தான் இதற்கு முழு காரணம் என்று காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே, அழகு நிலைய உரிமையாளரான கோவிந்த சாலையை சேர்ந்த அய்யம்பெருமாள் மற்றும் விழுப்புரம் கந்தசாமி நகரை சேர்ந்த வாடிக்கையாளர் கார்த்திகேயன் ஆகியோர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த 3 அழகிகளையும் போலீசார் மீட்ட நிலையில், அழகு நிலையத்தில் இருந்த ஒரு செல்போன் மற்றும் 3,500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பின் கைது செய்த இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.