இந்தியா

இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு கொடூரம் செய்த காவல் துறை அதிகாரியின் மகன்!.

Summary:

இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு கொடூரம் செய்த காவல் துறை அதிகாரியின் மகன்!.

டெல்லியில் போதை மருந்து தடுப்பு பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருபவர் அசோக் சிங் தோமர். இவரின் மகன் ரோகித் தோமர்  சமீபத்தில் இளம் பெண் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

உத்தம்நகரில் உள்ள பிபிஓ அலுவலகத்துக்கு ஒரு இளம்பெண்ணை வரவழைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் காவல்துறையில் புகார் கொடுப்பேன் என்று கூறியதால் அந்த பெண்ணை, அடித்து துன்புறுத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண் துணிச்சலாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், இளம்பெண்ணை சரம்வாரியாக தாக்குகிறார் அந்த இளைஞர். வலிதாங்க முடியாமல் அந்த பெண் கதறி அழும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலானதால், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொலிஸ் ரோஹித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் செய்த செயலால் பொதுமக்கள் பெரும் வேதனை அடைந்தனர். சமூகவலைத்தளத்தில் பரவி வந்த அந்த வீடியோவிற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Advertisement