மகாகவி பாரதியின் தங்கை மகன் 97 வயதில் காலமானார்; சோகத்தில் தமிழ் அறிஞர்கள்.!



Poet Bharathi Sister Son Died 

 

சுதந்திர போராட்ட வீரரும், கவினருமான மகாகவி பாரதியாருக்கு லட்சுமி அம்மாள் என்ற தங்கை இருக்கிறார். இவரின் மகன் கே. கிருஷ்ணன் (வயது 97). 

இவர் வாரணாசியில் இருக்கும் பாரதியாரின் இல்லத்தில் தங்கியிருக்கிறார். கிருஷ்ணன் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் உட்பட 6 மொழிகளில் புலமை பெற்றவர் ஆவார். 

Poet Bharathi

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இசைத்துறை பேராசிரியராகவும் பணியாற்றி வந்த கிருஷ்ணன், பாரதியின் கவிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றினை இந்தி மொழியில் இயற்றி வெளியிட்டு வந்தார். 

இவர் கலைத்துறை பணிகளை மேற்கொண்டமைக்காக தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்ட நிலையில், 97 வயதில் அவர் இயற்கை எய்தினார்.