அரசியல் இந்தியா

இன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன்! பிரதமர் மோடி ட்விட்! எதிர்பார்ப்பில் மக்கள்.

Summary:

இன்று மாலை 6 மணிக்கு நாட்டுமக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள உள்ளேன் என இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு நாட்டுமக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள உள்ளேன் என இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பதிவிட்டுல அந்த டிவிட்டர் பதிவில், "ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பேசவிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவலுக்கு பிறகு, அவர் எது குறித்து நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார் என்ற ஆவல் மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராகிவரும்நிலையில் பிரதமர் மோடி அதுகுறித்து மக்களிடம் பேச உள்ளாரா? அல்லது தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகள் வருவதால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவில் இருந்து பாதுகாப்பக இருக்கவேண்டும் என அறிவுறுத்த உள்ளாரா? அல்லது இந்தியா - சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றம் குறித்து பிரதமர் பேச உள்ளாரா என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் எந்த விஷயம் குறித்து பேச போகிறார் என்பது தெரிந்துவிடும்.


Advertisement