
PM Modi meet with all states CM tomorrow regarding corono lockdown
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க பெரும்பாலான நாடிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் நான்கு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது.
ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் இருந்ததை விட தற்போது பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? நீடிக்கப்படுமா என பலகேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக நாளை முக்கிய முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கொரோனா நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக 12 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அவர்கள் தரும் அறிக்கை, முதலமைச்சர்களின் பரிந்துரை, நாட்டின் நிலவரம் இவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் நாளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement