ஸ்மார்ட்போன் வாங்க ரூ.10 ஆயிரம் பணம் மத்திய அரசு தருகிறதா?.. வைரலாகும் போலி செய்தி.. அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்.!

ஸ்மார்ட்போன் வாங்க ரூ.10 ஆயிரம் பணம் மத்திய அரசு தருகிறதா?.. வைரலாகும் போலி செய்தி.. அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்.!


PIB Warning about Sarkari Vlog Channel fake News 

 

யூடியூபில் Sarkari Vlog சேனலில் சமீபத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவில், மத்திய அரசு இலவசமாக 2023ம் நிதியாண்டில் இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்குகிறது. 

இந்த திட்டத்தில் பயன்பெற பதிவு செய்ய வேண்டும். குடும்பத்திற்கு 2 நபர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க குறைந்தபட்ச பொருளாதார உதவியாக ரூ.10,200 பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. 

PIB

இவை குறித்த அறிவிப்பை மறுத்துள்ள மத்திய அரசு, மேற்படி யூடியூப் சேனல் வெளியிட்ட தகவலைபோல எந்த திட்டமும் அரசு செயல்படுத்தவில்லை. 

அவர்கள் வழங்கியுள்ள போலியான பதிவு பக்கங்களுக்கு சென்று உங்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் அரசு அடையாள ஆவணங்களின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.