இறுதி கட்டத்தை நெருங்கும் கொரோனா.. பைசர் கொரோனா தடுப்பூசிக்கு மேலும் கிடைத்த ஒரு அங்கீகாரம்..Pfizer corona vaccine approved by bahrain government

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொரோனா தடுப்பூசிக்கு பக்ரைன் நாட்டில் பயன்படுத்த அந்நாட்டு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸை தடுக்க இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் பயோஎன்டெக் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அமெரிக்காவின் பைசர் என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

corona

எனினும் இந்த தடுப்பூசி இதுவரை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் விரைவில் இந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படும்நிலையில் பைசர் தடுப்பூசிக்கு உலகத்திலேயே முதல் நாடாக இங்கிலாந்து ஒப்புதல் வழகியுள்ளது. பைசர் தடுப்பூசி அந்நாட்டில் அடுத்த வாரம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இங்கிலாந்தை தொடர்ந்து பக்ரைன் நாட்டிலும் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அந்நாட்டிலும் பைசர் தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பல்வேறு நாடுகள் பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிவரும்நிலையில் விரைவில் கொரோனாவுக்கு ஒரு முடிவு எட்டப்படும் என நம்பப்படுகிறது.