வித்தை காண்பிக்க நினைத்து வாயில் சூடு வாங்கிய சிறுவன்; பயமரியா இளங்கன்றுகளே உஷார்.!Petrol Flour Action make injury to Minor boy 

 

திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் இறுதிச்சடங்குகள் போன்றவற்றில் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சில விபத்துகளை ஏற்படுத்தும் விஷயங்கள் நடைபெறுவது உண்டு. 

அந்த வகையில், வாயில் எரிபொருளை ஊற்றிவிட்டு, அதனை வேகமாக வெளியேற்றி தீப்பற்றவைத்து சாகசம் செய்வது அதிகம் நடக்கிறது. இவ்வகை கொண்டாட்டங்கள் தென்னிந்தியா, வடஇந்தியா என பாரபட்சமின்றி நடக்கிறது. 

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜனூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், சிறுவன் ஒருவன் வாயில் பெட்ரோல் ஊற்றி வித்தை காண்பிக்க நினைத்தான். 

ஆனால், வித்தை விபரீதமானதால் அவரின் முகத்தில் தீப்பற்றியது. நல்வாய்ப்பாக அங்கிருந்தவர்கள் சுதாரிப்புடன் செயல்பட்டு தீயை அணைத்தனர். 

அங்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்கள், வருமானத்திற்காக இவ்வாறான உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.