காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியதால் பொறுப்பாளர் பதவி ராஜினாமா!

காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியதால் பொறுப்பாளர் பதவி ராஜினாமா!

Pc chakko resigned his post

கடந்த 8ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.  இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன.  காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. படுமோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அக்கட்சியால், 63 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதனையடுத்து டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அக்கட்சி மூத்த தலைவர் பி.சி. சாக்கோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அக்கட்சி மூத்த தலைவர் பி.சி. சாக்கோ கூறுகையில்,  2013ல் காங்கிரசின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. ஆம் ஆத்மி கட்சி துவங்கியவுடன், காங்கிரசின் மொத்த ஓட்டு வங்கியும் அக்கட்சிக்கு சென்றுவிட்டது. அதனை நாம் திரும்ப பெற முடியாது. 

Pc chakko

அந்த ஓட்டு வங்கி ஆம் ஆத்மியிடமே நீடிக்கும்.  2013-ம் ஆண்டு மட்டுமல்ல காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது என  
டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை  ராஜினாமா செய்த அக்கட்சி மூத்த தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்தார்.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அக்கட்சி மூத்த தலைவர் பி.சி. சாக்கோ கூறுகையில்,  2013ல் காங்கிரசின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. ஆம் ஆத்மி கட்சி துவங்கியவுடன், காங்கிரசின் மொத்த ஓட்டு வங்கியும் அக்கட்சிக்கு சென்றுவிட்டது. அதனை நாம் திரும்ப பெற முடியாது. 

2013-ம் ஆண்டு மட்டுமல்ல காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது என டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை  ராஜினாமா செய்த அக்கட்சி மூத்த தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்தார்.