ஏட்டு வேலைக்கு வேட்டு!! சாலை ஓரம் முட்டை திருடிய போலீஸ் ஏட்டு!! வைரல் வீடியோ காட்சி!!Panjab police stolen egg road side viral video

சாலையோரம் நின்றிருந்த டிரைசைக்கிளில் முட்டைகளை திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே பதேகார்க் என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றின் ஓரத்தில் முட்டை ஏற்றியவாறு டிரைசைக்கிளில் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தலைமை காவலர் ஒருவர் வாகனங்களை ஒழுங்குபடுவதுபோல் பாவனை காட்டிக்கொண்டே அந்த டிரைசைக்கிலின் அருகே வருகிறார்.

பின்னர் அந்த டிரைசைக்கிளில் இருக்கும் முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அந்த தலைமை காவலர் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனை அடுத்து பஞ்சாப் மாநில காவல்துறை உடனே இதுகுறித்து விசாரணை நடத்தி, குற்ற செயலில் ஈடுபட்ட தலைமை காவலர் ப்ரித்பால்சிங்கை பணியிடை நீக்கம் செய்துள்ளது.