150 பயணிகளுடன் பரிதவித்த இந்திய விமானம்! 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தான்!



pakistan helped to indian flight

கடந்த 14-ஆம் தேதிஇந்திய விமானம் ஒன்று 150 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து பாகிஸ்தான் வழியாக மஸ்கட் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வானிலை மிகவும் மோசமடைந்தது. இதனால்  விமானத்தை இயக்க முடியாமல் விமானி தடுமாறியுள்ளார்.

மேலும் மின்னல் தாக்கியதால் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் வேகமாக 34 ஆயிரம் அடிக்கு கீழே இறங்கியது. இதனால் விமான ஊழியர்களும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

flight

மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு "மே டே" என எச்சரிக்கை தகவலை  பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத்துறைக்கு கொடுத்துள்ளார். அந்த தகவலுக்கு உடனடியாக பதிலளித்து, அதில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் வான்வழி பகுதியை இந்திய விமானம் பத்திரமாக கடப்பதற்கு வழிகாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகாரியின் வழி காட்டுதலின் படி, விமானிகள் தங்கள் விமானத்தை இயக்கியதால், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பிறகு இந்திய விமானங்கள் அந்தநாடு வான் வழி பகுதியை பயன்படுத்த பாகிஸ்தான் தடைவித்திருந்தது, பின்னர் கடந்த ஜூலை மாதம் இந்திய விமானங்களை தனது வான் பகுதியில் அனுமதித்தது.


]