5 ஆண்டு காதல்.. காதலனை கரம்பிடிக்க, குடும்பத்துடன் ஓடோடி வந்த பாக். பெண்மணி: சட்டப்படி நடக்கும் திருமணம்.!

5 ஆண்டு காதல்.. காதலனை கரம்பிடிக்க, குடும்பத்துடன் ஓடோடி வந்த பாக். பெண்மணி: சட்டப்படி நடக்கும் திருமணம்.!



pakistan-girl-arrived-india-with-family-tie-knot-with-k

காதலுக்கு கண்களும் இல்லை, நாடுகள் சார்ந்த எல்லைகளும் இல்லை என்பதற்கு உதாரணமாக பல திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பெண்மணிக்கு 45 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவை சார்ந்தவர் சமிர் கான். பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பெண்மணி ஜவாரியா கணம். இவர்கள் இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்ட பழக்கமானது நட்பாக மாறி பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது.

இதனையடுத்து ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில்,  இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  

முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பிய தம்பதி அதற்கான விண்ணப்பங்களையும் பெற்று அட்டாரி - வாகா எல்லை வழியே காதலியின் குடும்பத்தினர் இந்தியா வந்தடைந்தனர். இந்தியாவிற்குள் அவர்களுக்கு 45 நாட்கள் தங்கியிருந்து திருமணத்தை முடிக்க விசா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் இருவருக்கும் வரும் 2024 ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.