சர்வதேச எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் குண்டுவீச்சு! இந்திய வீரர் பலி!pakistan attack in border


ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்மா காதி பகுதி மற்றும் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதியில் திடீரென சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

அப்போது எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தார். அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார் என்று ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Pakistan

இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.