மதுபானங்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட மதுபிரியர்கள்.! ஆன்லைன் மூலம் மதுவிற்பனைக்கு டெல்லி அரசு அனுமதி.!

மதுபானங்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட மதுபிரியர்கள்.! ஆன்லைன் மூலம் மதுவிற்பனைக்கு டெல்லி அரசு அனுமதி.!


online liquor sale allowed in delhi

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கையும், ஆயிரத்திற்கு மேலானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் அமல்படுத்தி  வருகிறது. இதனால், மருந்தகங்கள், பால் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

liquor

தற்போது மதுபானங்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதியடைந்து வருவதால், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக டெல்லி அரசு ஆன்லைன் வழி மதுவிற்பனைக்கு அனுமதி அளித்து உள்ளது.  இதன்படி, மதுபானம் வாங்க விரும்புவோர் வீட்டில் இருந்தபடியே, தங்களுடைய மொபைல் போனில் அதற்கான செயலியை கொண்டு அல்லது இணையதளம் வழியே மதுபானம் ஆர்டர் செய்யலாம். ஆனால், வீடுகளை தவிர, விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மதுபான வினியோகம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.