ஆன்லைனில் வேலை, நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் விளம்பரம் வருகிறதா?.. 30,000 பேரிடம் ரூ.200 கோடி மோசடி அம்பலம்.!

ஆன்லைனில் வேலை, நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் விளம்பரம் வருகிறதா?.. 30,000 பேரிடம் ரூ.200 கோடி மோசடி அம்பலம்.!


Online Job Per Day Rs 15000 INR Salary Scam 30000 Peoples Cheated Gang Forgery 200 Crore Money

ஆன்லைனில் வருவதை போல அதிக பணத்தை உடனடியாக சம்பாதித்துவிடலாம் என எண்ணி மக்கள் முதலீடு செய்தால் என்ன மாதிரியான விபரீத நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆன்லைனில் வீட்டில் இருந்தபடி வேலை, மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் என்ற விளம்பரங்கள் அதிகளவில் வந்தன. இவற்றில் வேலைக்கு சேர்ந்தவர்களை, ஆன்லைன் ஸ்டோர் விற்பனை வேலை செய்ய வேண்டும் என கூறி, ஊதியம் வாலட்டில் கிடைக்கும் என கூறியுள்ளனர். 

இவர்களின் வலையில் சிக்கியவர்களை நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும் அதிகபட்சமாக சம்பாதிக்கலாம் என மொத்தமாக 30 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.200 கோடியை ஏமாற்றி இருக்கின்றனர். டெல்லியை சேர்ந்த பெண் அளித்த புகாரில் மேற்கூறிய பகீர் சம்பவம் அம்பலமாகி, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்த விளம்பரத்தை வைத்து இளம்பெண் மோசடி ஆட்களுக்கு தொடர்பு கொள்ள, அவர்கள் மேற்கூறிய தகவலை தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக ஆன்லைனில் உள்ள பொருட்களை தள்ளுபடி விலையும் வாங்க வைத்துள்ளனர். இவ்வாறாக அவர் ரூ.1.2 இலட்சம் பணத்தை செலவளித்துள்ளார்.

delhi

இறுதிவரை அவருக்கான ஊதியம் வராததை தொடர்ந்து, ஏமாற்றப்பட்டதை உணர்த்த என்மணி நவம்பர் மாதம் 20ம் தேதி டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவ்வாறான மோசடியாட்கள் சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் இருந்து இயங்குவதாக கண்டறிந்துள்ளனர். 

இவர்களின் வங்கிக்கணக்கில் நாளொன்றுக்கு ரூ.5.2 கோடி வரையிலும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் அபிஷேக் கார்கா (வயது 40), சதீஷ் யாதவ் (வயது 32), சந்தீப் மஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி ஜியார்ஜியா நாட்டில் இருக்கும் நிலையில், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மோசடி கும்பல் 30 ஆயிரம் மக்களிடம் இருந்து மொத்தமாக ரூ.200 கோடி பணத்தை ஏமாற்றி இருக்கிறது.