இந்தியா

காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய காதலி.! 80 வயது முதியவருடன் காதலன் செய்த மோசமான செயல்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.

Summary:

One young girl believed her lover

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் எம்.எல்.ஏ குடியிருப்பில் வசித்துவரும் 80 வயதானவர் முகமது சலிமுதீன். இவரின் உறவினர் பையனான அப்துல் என்ற இளைஞர் அதே பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது வேலை செய்யும் இடத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

இவர்களின் காதலை பெண்ணின் வீட்டார் ஏற்று கொள்ளவில்லை. அதனால் அந்த இளம்பெண் தனது காதலனான அப்துலை நம்பி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருவரும் முகமது சலிமுதீன் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊரடங்கிற்கு பிறகு இருவருக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார் சலிமுதீன். 

அதனை நம்பி அந்த இளம்பெண்ணும் காதலனின் உறவினர் வீடான சலிமுதீன் வீட்டில் தங்கியுள்ளார். அதனை அடுத்து அப்துல் தனது காதலிக்கு மயக்க மருந்தை கொடுத்து மயக்கமான சமயத்தில் அவரும், 80 வயது முதியவரான சலிமுதீனும் சேர்ந்த அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். 

பின்னர் அந்த பெண் மயக்கம் தெளிந்த பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த இளம்பெண் அஞ்சாமல் பெண் ஆணையர் அஞ்சனி குமாரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். அதனை அடுத்து போலீசார் காதலன் மற்றும் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அப்துல் தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை தனது காதல் வலையில் சிக்க வைத்து பின்னர் அந்த பெண்களை எல்லாம் வெளிநாட்டிற்கு விற்பது போன்ற தொழிலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. 


Advertisement