இந்தியா

ஒரு வயது மகனின் திடீர் மரணம்..! ஏக்கத்தில் சாலையிலையே அமர்ந்து கதறி அழுத தந்தை..! கல் நெஞ்சையும் கரைத்த புகைப்படம்.!

Summary:

One year child died in Bihar father was in delhi

பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலார் ஒருவர் ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்தில் சிக்கியிருந்தநிலையியல் அவரது ஒரு வயது மகன் இறந்த செய்தி கேட்டதும் சாலையிலேயே அமர்ந்து கதறி அழுத புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போக்குவரத்துக்கு அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிகாரைச் சேர்ந்த ராம்புகார் பண்டிட் என்ற தொழிலாளர், ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் சிக்கியிருந்தநிலையில் தமது ஒருவயது மகன் இறந்துவிட்டதாக அவரது மனைவி கூறியதைக் கேட்ட ராம் பண்டிட், உடனடியாக பிகாரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

நடந்து செல்லும் வழியில்லையே எங்கே தனது மகனின் முகத்தை கடைசியாக ஒருதடவை கூட பார்க்கமுடியாமல் போய்விடுமோ என அஞ்சிய ராம்புகார் பண்டிட் சாலையிலையே அமர்ந்து கதறி அழ ஆரம்பித்துவிட்டார். இதனை பிடிஐ புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ் என்பவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

இந்த தகவல் தீயாக பரவியதை அடுத்து போலீசார் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் ராம்புகார் பண்டிட் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஊரை அடைந்தார்.


Advertisement