30 நாட்களில் 406 பேருக்கு கொரோனாவால் பாதித்த ஒருவர் நோயை பரப்புகிறார் - மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல்.!

30 நாட்களில் 406 பேருக்கு கொரோனாவால் பாதித்த ஒருவர் நோயை பரப்புகிறார் - மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல்.!


One corono patient may spread virus to 406 persons in 30 days

கொரோனா பாதித்த ஒருவர் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாவிட்டால் அவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா நோய் பரவிவிடும் ஆபத்து உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே இருக்கும்படி அரசு அறிவுறுத்திவருகிறது.

corono

மேலும், கொரோனா நோயாளி ஒருவர் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். அதுவே கொரோன நோயாளி முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாதபட்சத்தில் அவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது. எனவே சமூக விலகல் மற்றும் ஊரடங்கு முறைகளை சரியாக பின்பற்றினால் நோயை கட்டுப்படுத்தி விடலாம்.