என் புள்ளைய காப்பாத்துங்க..கெஞ்சி கதறிய பெற்றோர்! கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை! கலங்கவைக்கும் சம்பவம்!!one-and-half-year-baby-dead-by-corono

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் அச்சுதபுரம் மந்தல் பகுதியை சேர்ந்தவர் வீரபாபு. இவரது மகள் ஜான்விதா. ஒன்றரை வயது நிறைந்த அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சளிபிரச்சனை ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

பின்னர் உடனடியாக குழந்தையை அரசு கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு தனியார் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் அதனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா வார்டில் படுக்கை காலியாக இல்லை என கூறி அவர்களை காத்திருக்க கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

baby

இந்நிலையில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரமாக ஆம்புலன்ஸிலேயே குழந்தைக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுள்ளது.  ஜான்விதாவின் தந்தை குழந்தையின் அருகில் அமர்ந்து ஆக்சிஜன் பம்பை அழுத்திக் கொண்டுள்ளார். மேலும் எனது குழந்தையை காப்பாற்றுங்கள் என குழந்தையின் தாயார் மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சியுள்ளார்.

இந்நிலையில் ஆம்புலன்சில் இருந்த குழந்தை ஜான்விதா உயிரிழந்துள்ளது. தங்களின் கண் முன்னே குழந்தை உயிரிழந்ததை கண்ட பெற்றோர்கள் அங்கேயே விழுந்து படுத்து கதறி துடித்துள்ளனர். இது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.