இந்தியா

பேத்தியின் படிப்பிற்காக வீட்டை விற்று, ஆட்டோவிலே வாழும் முதியவர்.! கண்ணீர் விட வைக்கும் தாத்தாவின் தியாகம்.!

Summary:

மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ் என்பவர் அவரது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவ

மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ் என்பவர் அவரது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ் 60 வயதை கடந்தும் அவரது குடும்ப நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்.

ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டுவாராம். இவ்வளவு முதுமையில் தனது தாத்தாவின் கஷ்டத்தை பார்த்த பேத்தி நீங்கள் கஷ்டப்பட வேண்டாம், நான் படிப்பை நிறுத்தி விடவா தாத்தா என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு நீ விரும்பியதை படிக்க வேண்டும் அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று தனது பேத்தியை ஊக்கப்படுத்தியுள்ளார்.

தனது தாத்தாவின் கஷ்டத்தை புரிந்து அக்கறையுடன் படித்த அவரது பேத்தி பன்னிரண்டாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தேவராஜ் தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக சவாரி செய்துள்ளார். மேலும் தனது பேத்தியின் மேற்படிப்பிற்காக தான் தங்கியிருந்த வீட்டை விற்று தனது பேத்தியின் கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி, தனது குடும்ப உறுப்பினர்களை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

ஆனால் அந்த முதியவருக்கு அவரது ஆட்டோவே அவருக்கு வீடு ஆகிப்போனது. தனது ஆட்டோவில் வாழ தொடங்கினர். சாப்பிடுவது, உறங்குவது என அனைத்தையும் ஆட்டோவிலேயே செய்துள்ளார். இவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பல ஆட்டோ ஓட்டுனர்களின் உதவியுடன் இதுவரை சுமார் 5.3 லட்சம் ரூபாய் இவரது குடும்பத்திற்காக நிதி கிடைத்துள்ளது.
 


Advertisement